கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம், போதைப்பொருள் விற்பனையை தடுக்க கிராம அளவிலான கண்காணிப்பு குழு
06:50 PM Jun 28, 2024 IST
Share
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிராம அளவிலான கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். குழுவின் தலைவராக கிராம நிர்வாக அலுவலர் செயல்படுவார் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அங்கன்வாடி பணியாளர், கிராம ரோந்து பணி காவலர், பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.