இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு: நிறுவன உரிமையாளரின் ரூ.2 கோடி சொத்துகள் முடக்கம்
டெல்லி: இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் நிறுவன உரிமையாளரின் ரூ.2 கோடி சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய மருத்துவர்கள் உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேதப்பரிசோதனை அறிக்கையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழப்பு மூலம் உயிரிழந்தது தெரியவந்தது. இதற்கிடையே , மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் சிறுநீரக தொற்று காரணமாக ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகராம், குறித்து மத்திய பிரதேச சுகாதார துறை குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடந்த சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. அப்போது குழந்தைகள் உட்கொண்ட கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்து தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்து உள்ளது.மேலும் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் மருந்து தமிழ்நாட்டின் காஞ்சிபுர மாவட்டத்தில் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டது.
பின்னர் கோல்ட்ரிஃப் இருமல் சிரப் தமிழ்நாடு சுகாதாரத் துறை ஆய்வு செய்தது. தமிழ்நாடு மருந்து சோதனை ஆய்வகத்தின் அறிக்கை, சிரப்பில் அதிக அளவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது. சிரப் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் (48.6 சதவீதம் w/v) சேர்க்கப்ப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சுப் பொருளாகும்" என்று கூறிப்பிட்டு இந்த மருந்தை பயன்படுத்த தடை விதித்தது.
பின்னர் கேரளா, ராஜஸ்தான் , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் மருந்து விஷமாக மாறியது குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த நிலையில், 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீஸ் கைது செய்தது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்து 10 இடங்களில் ED சோதனை நடத்தியிருந்தது. தமிழகத்தின் தலைநகரான கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள சொத்துக்கள், ஜி. ரங்கநாதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமானவை என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு ரூ.2.04 கோடி என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தியில் மருந்து தர மூலப்பொருட்களுக்குப் பதிலாக உற்பத்தியாளர் தொழில்துறை தர மூலப்பொருட்களை "சரியான தர சோதனைகள் இல்லாமல்" பயன்படுத்தியதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.பதிவுகளை உருவாக்குவதைத் தவிர்ப்பதற்காக இதுபோன்ற பொருட்கள் விலைப்பட்டியல்கள் இல்லாமல் ரொக்கமாக வாங்கப்பட்டன. மத்தியப் பிரதேச காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை கவனத்தில் கொண்டு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ED பணமோசடி வழக்கைப் பதிவு செய்தது, ஒன்று தமிழ்நாடு காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டது. சோதனையின் தொடர்ச்சியாக ரங்கநாதனின் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.