தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.2,796 கோடி ஊழல் வழக்கில் அனில் அம்பானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: சிபிஐ நடவடிக்கை

புதுடெல்லி: ரூ.2,796 கோடி ஊழல் வழக்கில் அனில் அம்பானி மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கும், யெஸ் வங்கி மற்றும் வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராணா கபூரின் குடும்ப நிறுவனங்களுக்கு இடையே நடந்த மோசடி பரிவர்த்தனைகள் தொடர்பாக யெஸ் வங்கிக்கு ரூ.2,796 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

Advertisement

இதுதொடர்பாக அனில் அம்பானி, ராணா கபூர் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அம்பானி அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ராணா கபூர், பிந்து கபூர், ராதா கபூர்,

ரோஷ்னி கபூர் ஆகியோர் மீதும் எப்எல், ஆர்ஹெச்எப்எல், ஆர்ஏபி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட், பிளிஸ் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட், இமேஜின் ஹேபிடேட் பிரைவேட் லிமிடெட், இமேஜின் ரெசிடென்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மோர்கன் கிரெடிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டில் ராணா கபூரின் ஒப்புதலின் பேரில் யெஸ் வங்கி மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மற்றும் வணிகக் கடன்களில் சுமார் ரூ.2,045 கோடியையும், வணிகப் பத்திரங்களில் ரூ.2,965 கோடியையும் முதலீடு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடி ஏற்பாட்டின் விளைவாக யெஸ் வங்கிக்கு ரூ. 2,796.77 கோடி அளவுக்கு மிகப்பெரிய தவறான இழப்பு ஏற்பட்டது.  அதே சமயம் அனில் அம்பானியின் பிற நிறுவனங்களுக்கும் ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் சட்டவிரோத லாபம் கிடைத்தது என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement