மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் சுகாதார சீர்கேட்டில் நங்கஞ்சி ஆறு
*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரவக்குறிச்சி : மாநகராட்சி நிர்வாகிகள் அலட்சியதால் காதார நங்காஞ்சி ஆறு சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது.நங்காஞ்சி ஆறு அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு இது திண்டுக்கல் மாவட்டத்தின் வடகாடு கிராமப் பகுதியில் உற்பத்தியாகி, பரப்பலாறு அணையை அடைந்து, பின்னர் சற்றே சறுக்கு முகமாக ஓடி குடகனாற்றில் கலந்து, பின்னர் அமராவதி ஆற்றுடன் இணைகிறது. இந்த ஆறு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதிலும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.
நங்காஞ்சி ஆறு திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகிறது.இந்த சிற்றாறுகள் பரப்பலாறு அணையில் தேங்கி, உபரிநீர் சிறு ஆறாக நங்காஞ்சி ஆறு என்ற பெயரில் வெளியேறுகிறது. தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து வடகிழக்காக ஒடுகிறது. விருப்பாச்சி, அரசப்பபிள்ளைபட்டி, இடையகோட்டை, கோவிந்தாபுரம் போன்ற ஊர்களின் வழியாக சென்று குடகனாற்றில் கலக்கிறது.
இது கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றோடு கலந்துவிடுகிறது. நிலத்தடி நீர்பெருக உதவுகிறது, குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. விவசாயத்திற்கும் இது மிகவும் உதவுகிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் நங்காஞ்சி ஆறு சுகாதார சீர்கேடு அடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் நங்காஞ்சி ஆறு சாக்கடையாக மாறிக் கிடப்பதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் வேதனை தெரிவிக்கின்றனர்.மொத்தத்தில், நங்காஞ்சி ஆறு ஒரு முக்கியமான நீர் ஆதாரம் என்றாலும், தற்போது அதன் பாதுகாப்பு குறித்து கேள்விக்குறியாகஉள்ளது.
தற்போது நங்காஞ்சி ஆற்றில் கோரைப் புற்களும், சீமைக்கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்து முட்புத ராக காட்சியளிப்பதால், சாக்கடை நீர் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் குளம் போல் தேங்கி நிற்கின்றது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மழை வந்தால் தண் ணீர் வெளியேற முடியாமல் ஒரே இடத்தில் மீண்டும் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது.
இதனால் அப்பகு தியில் கோழியின் மீன் இறைச்சி கழிவுகளை ஆற்றின் பகுதி கொட்டப்படுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது . எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நங்காஞ்சி ஆற்றில் அடர்ந்து வளர்ந்துள்ள கோரைப்புற்கள் மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்றி ஆற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வர்கள் கோரிக்கை வைத்தனார்.