கொப்பரை தேங்காய் விலை உயர்வு தேங்காய் எண்ணெய் ரூ.500 ஆக அதிகரிப்பு
சேலம்: தமிழகத்தில் கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, அரச்சலூர், காங்கேயம், திண்டுக்கல், கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து பறிக்கப்படும் தேங்காய் தமிழகம் மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவில் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக தேங்காய் விளைச்சல் பாதித்து அதன் விலை வேகமாக உயர்ந்துள்ளது.
இதனால், ஒரு கிலோ கொப்பரை தேங்காய் விலை ரூ.280 முதல் ரூ.300 வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேங்காய் எண்ணெய் விலை கடந்த சில மாதமாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக நடப்பாண்டு தொடக்கத்தில் லிட்டர் ரூ.250 ஆக அதிகரித்தது. இவை படிப்படியாக உயர்ந்து 7 மாதத்தில் ரூ.500 ஆக அதிகரித்துள்ளது.