கோபா அமெரிக்கா மகளிர் கால்பந்து திக்கித் திணறிய உருகுவே தீயாய் உருக்கிய பிரேசில்: 5 கோலடித்து இறுதிக்கு தகுதி
Advertisement
போட்டி துவங்கியது முதல் மின்னலாய் பாய்ந்த பிரேசில் வீராங்கனைகள் அற்புதமாக ஆடி கோல் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த அணியின் அமண்டா குடியெரஸ், ஆட்டத்தின் 11 மற்றும் 65வது நிமிடங்களில் 2 கோலடித்து அசத்தினார். மேலும், பிரேசிலின் கியோ கார்பலெனி, மார்தா, டுடின்ஹா தலா ஒரு கோலடித்தனர். உருகுவே தரப்பில் இஸா ஹாஸ் மட்டும், 53வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.
அதனால், 5-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி இமாலய வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் பிரேசில், கொலம்பியா அணிகள் மோதவுள்ளன. முன்னதாக, 2வது இடத்துக்கான போட்டி, வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கவுள்ளது. அதில் அர்ஜென்டினா - உருகுவே அணிகள் மோதும்.
Advertisement