கூட்டுறவு உதவியாளர், இளநிலை உதவியாளர் பணி 5ம் தேதி எழுத்து தேர்வு
சென்னை: மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் அறிவிப்பு மூலம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 327 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 5ம் தேதி சென்னையில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதள முகவரியான www.tncoopsrb.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாநில ஆள் சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement