தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குன்னூர் அருகே புதிய சாலைக்கு பூமி பூஜை சமுதாய நலக் கூடம் திறப்பு

*நீலகிரி எம்பி., ராசா பங்கேற்பு குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதியினர், அன்றாட அலுவல்,பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல 3 கி.மீ., தூரமுள்ள வண்டிச்சோலை பகுதிக்கு சென்று,அங்கிருந்து பேருந்து மூலம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரிக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக கோடமலை எஸ்டேட்...

*நீலகிரி எம்பி., ராசா பங்கேற்பு

குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட சோலடாமட்டம் கிராமத்தில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.

அப்பகுதியினர், அன்றாட அலுவல்,பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல 3 கி.மீ., தூரமுள்ள வண்டிச்சோலை பகுதிக்கு சென்று,அங்கிருந்து பேருந்து மூலம் குன்னூர், ஊட்டி, கோத்தகிரிக்கு சென்று வருகின்றனர்.குறிப்பாக கோடமலை எஸ்டேட் - வண்டிச்சோலை வரையுள்ள பாதை, வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சாலை அமைக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

வனத்துறைக்கு உட்பட்ட பாதையில் சாலை அமைத்து, வாகனம் சென்று வரும் அளவுக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என, கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே தமிழக அரசு ரூ.1.20 கோடி செலவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதன் ஒரு பகுதியில் முதற்கட்டமாக ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி பணிகள் பூமி பூஜையுடன் துவங்கப்பட்டது. அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக நேற்று ரூ.99 லட்சம் செலவில் 2ம் கட்ட சாலை பணிகள் துவங்கியது.

இதில் தமிழக அரசு தலைமை கொறடா ராமசந்திரன், திமுக மாவட்ட பொருப்பாளர் கே.எம்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு, சாலை பணியை பூமி பூஜை செய்து, துவக்கி வைத்தனர். அப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான சமுதாய கூடம் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திறந்து வைத்தார்.

மாவட்ட திமுக தொழிலாளர் அணி சார்பாக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு,சப்.கலெக்டர் சங்கீதா,தாசில்தார் ஜவஹர், மாவட்ட துணை செயலாளர்கள் லட்சுமி, ரவிக்குமார், ஒன்றிய செயலாளர் பிரேம்குமார்,குன்னூர் நகர செயலாளர் ராமசாமி,

மாநில விளையாட்டு அணி மேம்பாட்டு செயலாளர் வாசிம் ராஜா,பொதுக்குழு உறுப்பினர் செல்வம்,காளிதாஸ்,குன்னூர் முன்னால் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுனிதா,மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார்,முன்னாள் மாவட்ட முன்னாள் ஊராட்சி உறுப்பினர் மீனா ஆனந்தராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி,பாலசுப்ரமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மநாபன், வினோத்குமார் என பலர் கலந்து கொண்டனர்.

Related News