தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலைமை கண்டுகொள்ளாததால் அதிருப்தியில் இருக்கும் குக்கர் கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

Advertisement

‘‘சேலம்காரர் சுற்றுப்பயணத்தை புறக்கணிச்ச மாஜியின் புலம்பல் அதிகரிச்சிட்டு வருதாமே என்னவாம்..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘மஞ்சள் மாவட்டத்துல இலை கட்சி மாஜியின் புலம்பல் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுதாம்.. சமீப நாட்களா இலை கட்சியின் சேலம் விஐபியை எதிர்த்து வரும் ரெட்போர்ட் தன்னோட மாவட்டத்துல இருக்கிற நிர்வாகிகளை எல்லாம் தன்னோட கட்டுப்பாட்டிற்குள் வைக்க படாதபாடு படுகிறாராம்.. ஆனா எலக்சன் நெருங்கி வருவதால் ரெட்போர்ட்டை மட்டும் நம்பி இருந்தா ஒரு பயனும் இல்லைன்னு சில நிர்வாகிகள் சேலம் விஐபியை நேரடியா தொடர்பு கொள்ள தொடங்கி இருக்காங்களாம்.. சமீபத்தில் சேலம் விஐபி மேற்கு மண்டலத்துல தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கினாரு.. சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சிக்கு சொந்த ஊரில் இருந்து கொண்டே ரெட்போர்ட் போகாம புறக்கணிச்சிட்டாரு..

அதேபோல தன்னோட மாவட்டத்துல இருக்கிற நிர்வாகிகளையும் போக விடாம அழுத்தம் கொடுத்ததாக சொல்றாங்க.. ஆனா அதையும் மீறி மாஜி ஊராட்சி தலைவர் ஒருவர் தலைமையில 10க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிங்க சேலம் விஐபி சுற்றுப்பயண தொடக்க நிகழ்ச்சியில் ஆஜராகி இருக்காங்க.. இந்த தகவல் ரெட்போர்ட்டுக்கு கிடைத்ததும் அப்செட் ஆகிட்டாராம்.. சொந்த மாவட்டத்துல இருக்கிற நிர்வாகிகளே என் பேச்சை கேட்பதில்லை. இனி மாநிலம் முழுவதும் இருக்கிறவங்க எங்க கேட்க போறாங்கன்னு தன்னை சந்திக்க வருகிற நெருக்கமானவங்கிட்ட புலம்பி தள்ளுகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தலைமை கண்டுகொள்ளாததால் ரொம்பவே அதிருப்தியில் இருக்காங்களாமே குக்கர் கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மன்னர் மாவட்டத்தில் குக்கர் கட்சி செயல்படாமல் இருப்பதால் நிர்வாகிகள் என்ன செய்வது தெரியாமல் இருக்காங்களாம்.. கடந்த தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பல லட்சங்களை தன் சொந்த பணத்தில் செலவு செய்தாங்களாம்... 2026 தேர்தலில் குக்கர் கட்சியில் எந்த தேர்தல் பணியும் இதுவரை நடப்பது போல் தெரியவில்லையாம்.. நேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தலைமையும் கண்டுகொள்ளாததால் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குக்கர் தலைமையானவர் மீது கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இதுகுறித்து மாவட்ட செயலாளர்களிடம் ரெண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்டால் நாங்கள் என்ன செய்வது தலைமையிடத்தில் இருந்து எந்த உத்தரவும் இதுவரை வரவில்லை. பணி செய்ய எங்களிடம் என்ன இருக்கு, செலவுக்கு பணம் இல்லை என அவர்களிடம் கறாராக தெரிவித்து விட்டார்களாம்..

இதனால் தொண்டர்கள் திக்குமுக்காடி போய் இருக்காங்களாம்.. ஒரு சில சீனியர் நிர்வாகிகள் மாவட்டத்தில் கட்சியின் நிலைமையை தலைமைக்கு கடிதம் மூலம் விரிவாக எழுதி அனுப்ப திட்டமிட்டுள்ளாங்காளாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஆபிஸ்லயே ஓசியில் டிபன்-சாப்பாடு-டிபன்னு இருக்கும் உயரதிகாரிய கண்டு பயந்து ஓடுறாங்களாமே பணியாளருங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி கார்ப்பரேஷன்ல நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில, அதிகாரிகளே கவுன்சிலர்கள் போல செயல்படுறாங்க.. கவுன்சிலர்கள் சொல்ற எந்த பணியும் நடக்கிறதில்ல.. அப்டின்னு குற்றச்சாட்டு கிளம்பியிருக்காம்.. குறிப்பா, பொறியியல் பிரிவுல இருக்கிற உயரதிகாரி ஒருவர், கவுன்சிலர்களும், மத்த பணியாளர்களும் சொல்ற எதையுமே கண்டுகொள்வதில்லையாம்.. இந்த அதிகாரி, தனக்கு வரும் பைலுக்கு கையெழுத்து போட்டா, அதுல கிடைக்கிற கமிஷன் வந்தா போதும்னு இருக்கிறாராம்.. வேறு எதையும் பத்தி கண்டுகொள்வதே இல்லையாம்.. இந்த அதிகாரி காலையில ஆபிஸ் வந்தா டிபன், மதிய சாப்பாடு, இரவு டிபன் வரை ஓசியிலயே முடிச்சிடுறாராம்..

இதனால் இவரை கண்டாலே மத்த ஆபிசருங்க பயந்து ஓடிடுறாங்களாம்.. இப்படி இருந்தா, எந்த திட்டப்பணி தான் ஒழுங்கா நடக்கும்னு மாநகராட்சி பணியாளர்கள் புலம்புறாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நான்கு கோடி ரூபாய் வசூல் விவகாரத்தில் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்தாங்களாமே இலைக்கட்சி நிர்வாகிகள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்தி விட வேண்டும் என்பதில் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே தீவிரமாக இருக்காராம்.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை நியமிச்சதோடு மட்டுமல்லாமல் பாக கிளைகளுக்கும் புதிய நிர்வாகிகளை நியமிக்க உத்தரவிட்டுள்ளாராம்.. இதன்படி சென்னை புறநகர் மாவட்டத்துல அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர், ஆலந்தூருன்னு ரெண்டு பெரிய தொகுதி இருக்குதாம்..

இங்கு வழக்கத்தை விட நாலு பொறுப்பாளர்களை நியமிச்சாராம் இலைக்கட்சி தலைவர். இவர்கள் தொகுதி முழுவதும் சுற்றிவந்ததோடு கட்சியின் நிலவரத்தை தெரிந்து கொண்டார்களாம்.. மூன்று கோஷ்டிகள் இருப்பதுடன், பதவியை பெற்றுக்கொண்டு, பல்வேறு தொழில்களுக்காக பதவியை பயன்படுத்தியது தெரிஞ்சு போச்சாம்.. இதனால் ஒன்றியம், பாகம், வட்டத்தை பிரித்து புதிய புதிய நிர்வாகிகளை நியமிச்சாங்களாம்.. இவர்களின் அதிரடியால் பழம்தின்னு கொட்டைபோட்ட முக்கிய நிர்வாகிகள் ரொம்பவே ஆடித்தான் போனாங்களாம்.. எப்படி இந்த பொறுப்பாளர்களை ஊரை விட்டு வெளியேற்றுவது என திட்டம் போட்டு, ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சம் வரை என மொத்தமாக ரூ.4 கோடி வரை வசூல் செஞ்சிட்டாங்கன்னு நாலு பக்க மொட்டை கடிதத்தை தட்டிவிட்டுட்டாங்களாம்.. அதுவும் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் தெரிந்தவர்கள் மூலமாக பரப்பிவிட்டுட்டாங்களாம்.. இதனை கொஞ்சமும் எதிர்பாராத எழுபது வயதை தாண்டிய பொறுப்பாளர்கள் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம்..

ஒழுங்காக சாப்பாடு இல்லாமல் உழைக்கும் நம்மை இப்படி இழிவுபடுத்திட்டாங்களேன்னு நொந்துபோயிட்டாங்களாம்.. இதனால அதிர்ச்சியடைந்த பொறுப்பாளர்கள், புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் மூலமாக மண்டபம் ஒன்றுக்கு வரவழைச்சாங்களாம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் புதிய பொறுப்புக்கு வந்த நீங்கள் எல்லோரும் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என சொல்ல சொல்லி எல்லா காட்சிகளையும் வீடியோவாக பதிவு செஞ்சிட்டாங்களாம்... 4 மணி நேரம் இந்த வாக்குமூலம் பதிவானதாம்.. அதே நேரத்தில் புதிய நிர்வாகிகள் அனைவரும் பதவியை உடனே ராஜினாமா செய்யணும், அப்படியே போனாலும் தேர்தல் வரை தான் பொறுப்பில் இருப்பீர்கள் எனவும் மிரட்டல் விட்ட தகவலை எல்லாம் சேகரித்த பொறுப்பாளர்கள், இலைக்கட்சி தலைவரின் கவனத்திற்கு ஆதாரத்தோடு ரிப்போர்ட்டை தட்டிவிட்டிருக்காங்களாம்.. இந்த விவகாரத்தை கேட்ட இலைகட்சி தலைவர், அதிரடி நடவடிக்கை எடுக்கப் போவதாக கட்சி நிர்வாகிகளிடையே பரபரப்பு ஏற்பட்டிருக்கு.. இதனால் முக்கிய நிர்வாகியின் பதவி எந்தநேரத்திலும் டூமிலாக வாய்ப்பு இருப்பதாக கட்சிக்காரங்க பேசிகிறாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

Advertisement

Related News