தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குக்கர், பலாப்பழ ஆதரவாளர்களை தூக்க தூண்டில் போடும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலத்துக்காரர் ஊரில் எந்த நிகழ்ச்சினாலும் ஓடி வரும் ரத்தத்தின் ரத்தங்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

Advertisement

‘‘இலைக்கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிவிட வேண்டும் என்பதில் இலைக்கட்சி தலைவர் ரொம்பவே உறுதியாக இருக்காராம்.. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பல பொறுப்பாளர்களை நியமித்து வேலை படுவேகமாக போய்கிட்டிருக்காம்.. ஒரு பக்கம் பிரசாரத்தையும் நடத்திக்கிட்டிருக்காராம்.. இதற்காக பல கோடிகளை அள்ளி வீசிக்கிட்டிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதே நேரத்தில் அவரது சொந்த ஊரில் கட்சி வேலை பார்க்க முடியாத வகையில் பண தட்டுப்பாடு அதிகமாக இருக்குதாம்.. இங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் அடிமட்டத்துக்கு போய் அலசி ஆராய்ஞ்சி புதிய புதிய நிர்வாகிகளை போட்டுட்டாராம்.. இவ்வாறு பொறுப்பை பெற்றவர்களுக்கு செலவு செய்ய காசில்லையாம்.. பத்தாண்டு காலம் எம்பி, எம்எல்ஏ, மேயர் மற்றும் கூட்டுறவுகளில் தலைவர்களாக இருந்து சம்பாதித்தவர்கள் எல்லோரும் ஒதுங்கிட்டாங்களாம்.. எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் நானும் இருக்கேன்னு ஓடிவருவாங்களாம்... செலவுக்கு துட்டு என்றதும் தலைதெறிக்க ஓட்டம் பிடிச்சிடுறாங்களாம்.. புதிய நிர்வாகிகளோ உழைப்பை தாரோம், பணத்துக்கு வழியில்லை என்று கையை விரிக்கிறாங்களாம்.. மூன்று தொகுதிகளை கொண்ட மாங்கனி மாநகரத்தில் 800 பூத்துக்கள் இருக்காம்.. ஒவ்வொரு பூத்துக்கும் ரெண்டு ஆயிரம் கொடுக்க சம்பாதித்தவர்கள் முன்வரவில்லையாம்.. இதனால் பணத் தட்டுப்பாடு பெரும் பிரச்னையை கொண்டுவந்திருக்காம்.. ஊருக்கெல்லாம் கொட்டிக்கொடுக்கும் இலைக்கட்சி தலைவர் சொந்த ஊரில் பூத்துக்கு கொடுத்தால் என்ன என்ற கேள்வியோடு ரத்தத்தின் ரத்தங்கள் வானம் பார்த்த பூமியா இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘போராட்டத்திற்கு வந்த மூதாட்டியிடம் போய் தனது கெத்தை காட்டினாராமே ஒரு காக்கி அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பனியன் மாநகர பகுதியில் இருந்து சேகரமாகும் குப்பைகழிவுகளை குடியிருப்பு பகுதியில கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்திருக்கு.. இந்த போராட்டத்துல கலந்துக்கிட்டவங்கள போலீசார் கைது பண்ணுனாங்க.. அப்போ, பாதுகாப்பு பணியில இருந்த சரக அளவிலான ஒரு அதிகாரி, 60 வயது மூதாட்டி ஒருவரை பார்த்து, வாய்க்கு வந்தபடி ஆபாசமாக திட்டினதோடு இல்லாம பகிரங்கமா மிரட்டவும் செய்திருக்கிறாரு.. அதோடு, என்னை எந்த அதிகாரியாலும் ஒன்றும் புடுங்க முடியாது. என மார் தட்டினாராம்.. இந்த வீடியோ சமூக வலைதளங்கல பரவிக்கிட்டு இருக்கு... பொதுமக்கள் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு அந்த அதிகாரிக்கு தெரியலையே... என போராட்டத்துக்கு வந்த மக்கள் நொந்துகொண்டாங்களாம்.. ஏற்கனவே, இதேபோல் சாமளாபுரம் பிரச்னையில் அப்போது எஸ்.பி.யாக இருந்த அதிகாரி பெண்களை தேடி தேடி பிடித்து, இழுத்துப்போட்டு அடிச்சாரு.. அவரைப்போலவே இந்த அதிகாரியும் மாறிட்டு வர்றாரே..’’ என புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தலில் பாதிப்பு ஏதும் வந்துவிடக்கூடாது என்பதில் குறியா இருக்கும் சேலத்துக்காரர் குக்கர், பலாப்பழக் கட்சியினரை தூக்க தூண்டில் போடும் வேலையை முடுக்கி விட்டுள்ளாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் கணிசமான அளவிற்கு குக்கர்காரர் மற்றும் பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் இருக்காங்க.. அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் இவர்களால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, இவர்களையெல்லாம் இலைக்கட்சியின் பக்கமாய் சாய்க்க வேண்டும் என்பது சேலத்துக்காரரின் நேரடி உத்தரவாம்.. இதனால், குக்கர் மற்றும் பலாப்பழ தரப்பினரை அடையாளம் கண்டு தூண்டில் போடும் வேலையில் உள்ளூர் இலைக்கட்சி தரப்பினர் தீவிரமாய் இறங்கியுள்ளனராம்.. முதல்கட்டமாக குக்கர் தரப்பினரின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கும் வேலை தீவிரமாக நடக்கிறதாம்.. இவர்களை காலி செய்த பிறகு பலாப்பழ தரப்பினரையும் தூக்கி விடலாம் என்ற கணக்கில் இலைக்கட்சியினர் வேலை பார்த்து வருகிறார்களாம்.. ஏற்கனவே குக்கர் தரப்பைச் சேர்ந்த மீசைக்கார மாஜியை தூக்கிவிட்ட தெம்பில் அடுத்தடுத்த ஆட்களுக்கு குறி வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பட்டாசு பெயரில் வலைவிரிக்கும் மோசடி பேர் வழிகளால் சைபர் க்ரைம் காக்கிகள் முணுமுணுப்பில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிக பூமியான புதுச்சேரி யூனியனில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்தபடியே உள்ளதாம்.. படிப்பறிவு அற்றவர் முதல் அதிகார வட்டம் வரையிலும் ஏமாந்தவர்களின் பட்டியலில் உள்ளார்களாம்.. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விடிவு இல்லையாம்.. சமீபகாலமாக ஆன்லைன் வழியாக பொருட்களை வாங்கும் பழக்கம் மக்களிடத்தில் அதிகரித்திருக்க, அதையும் சைபர் க்ரைம் பேர்வழிகள் புதுவிதமாக பயன்படுத்தி மோசடி செய்து வருகிறார்களாம்.. பிரபல பட்டாசு பிராண்ட் பெயரில் விற்பனையாளர்களாக வலைவிரித்து ஆர்டர் எடுக்கும் பெயரில் பணம் சூசகமாக விழுங்கப்படுகிறதாம்.. இதனால் உண்மைத் தன்மையை அறியாமல், ஆன்லைன் அறிவிப்புகளை நம்பி யாரும் இனிமேல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாமென சைபர் க்ரைம் மீண்டும் யூனியன்வாசிகளை வலியுறுத்தி இருக்காம்.. எத்தனை விழிப்புணர்வு கொடுத்தாலும் என்ன பயன் என்ற முணுமுணுப்பு சைபர் காக்கி வட்டாரத்தில் உள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement