சென்னை: தமிழகத்தில் நடைபெறும் குற்றச் செயலையும், போதை பொருள்கள் புழக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் குற்றங்களுக்கு பழி தீர்க்கும் இடமாக சென்னை மாறியிருக்கிறது. நேற்றைய முன்தினம் தினம் தமிழக பாஜ மகளிர் அணியின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் நிதியா கணவன் சீனிவாசன் மீது கொலைவெறி தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. நேற்று முன்தினம் மட்டும் சென்னையில் நடந்த 3 கொலைகள், இங்கிருக்கும் சட்டம் ஒழுங்கை பிரதிபலிக்கிறது.