தொடர் மழையால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சத்தரை கொண்டஞ்சேரி தரைப்பாலம் மூழ்கியது.
திருவள்ளூர்: தொடர் மழையால் திருவள்ளூர் அருகே தரை பாலம் மூழ்கியுள்ளது இதனால் பத்து கிராமமக்கள் 7 கிலோமீட்டர் தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாகவும் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கேசவரம் அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கேசவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீரால்
திருவள்ளூர் மாவட்டம் சித்தரை கண்டிகை சித்தரை இடையிலான தரை பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் 10 கிராமங்கள் துண்டிக்கபட்டு பாதிப்பானது ஏற்பட்டுருக்கிறது. 10 கிராமத்தை சேர்ந்த மப்பேடு, சித்தரை , கொண்டஞ்சரி, உளுந்தை, சுங்கச்சாத்திரம் போகக்கூடிய அந்த பொதுமக்களானது 7 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலையானது நீடித்துவருகிறது.
கடந்த 18 நாட்களாக குறையாத வெள்ளமானது ஆற்றியில் சென்று கொண்டிருப்பதால் அப்பகுதிமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வருடம் வருடம் பருவமழை காலங்களில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதால் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வேலைக்கு செல்வதற்கும் கல்லூரி மாணவர்களும் மற்றும் பள்ளி மாணவர்களும் அவதிக்குள்ளாகும் சுழ்நிலையானது ஏற்பட்டுவருகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியானது மண்சோதனை செய்யப்பட்டு 6 மாதங்கள் பிறகு மீண்டும் வெள்ளம் வந்ததால் இப்பகுதியில் பணிகளானது தடைபட்டிருக்கிறது. இப்பகுதியில் மேம்பாலத்தை அமைத்துதர வேண்டும் என மக்களானது கோரிக்கை விடுத்திருகின்றனர்.