தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ.2.85 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரம்

*எம்எல்ஏ ஆய்வு

Advertisement

கலசப்பாக்கம் : ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ரூ.2.85 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்தார்.ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்பியபட்டு ஊராட்சியில் முதலை மடவு பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது நம்பியம்பட்டு, மேல்குப்ப சாத்தனூர், கீழ்குப்ப சாத்தனூர், பெரிய வீரப்பனூர், சின்ன வீரப்பனூர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நீண்ட தூரம் சுற்றிவர வேண்டிய நிலை இருந்து வந்தது.

எனவே, மலைவாழ் மக்களின் நலன் கருதி நடுப்பட்டு மற்றும் முதலை மடவு கிராமங்களை இணைக்கும் விதத்தில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என எம்எல்ஏ பெ.சு.தி. சரவணனிடம் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோரிடம் எம்எல்ஏ வலியுறுத்தியதின் பேரில் ரூ.2.40 கோடி மதிப்பில் புதிதாக உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், ரூ.1.90 கோடி மதிப்பில் ஜவ்வாதுமலை, அமிர்தி, முதலை மடவு சாலை அமைக்கும் பணி தொடங்க உள்ளது.

இந்நிலையில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்போது, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி செல்வம், முன்னாள் ஊராட்சி தலைவர் சாந்தி ஜெயராமன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, முட்நாட்டூர் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் திறந்து வைத்தார்.

Advertisement

Related News