கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி
*எம்எல்ஏ ஆய்வு
கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் அருகே செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேற்று ஆய்வு செய்தார்.கலசப்பாக்கம் தொகுதியில், செய்யாற்றின் குறுக்கே பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் அமைச்சர் எ.வ.வேலுவிடம் வலியுறுத்தினர்.
அதன்பேரில், பழங்கோயில் மற்றும் பூண்டி கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.19.92 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்பணியை எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் நேற்று நேரில் ஆய்வு செய்து, பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.அப்போது, ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பிச்சாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.