தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொகுதி பங்கீட்டில் கடும் இழுபறி பீகாரில் என்டிஏ கூட்டணியில் குழப்பம்: 15 சீட் கேட்கும் முன்னாள் முதல்வர் மஞ்சி; சிராக் பஸ்வான் வெளியேறுகிறார்?

பாட்னா: பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) தொகுதி பங்கீட்டில் கடும் குழப்பம் நிலவுகிறது. சிராக் பஸ்வான் 40 சீட்கள் கேட்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சி குறைந்தபட்சம் 15 சீட் தந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் வரும் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான விஷயங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Advertisement

இம்முறை களத்தில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ, சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதம் ராம் மஞ்சியின் எச்ஏஎம், விஎஸ்ஐபி கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், சிபிஐ (எம்எல்) (எல்), மார்க்சிஸ்ட், சிபிஐ கட்சிகள் இணைந்த மகாகத்பந்தன் கூட்டணியும் உள்ளன. இதுதவிர, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனாலும் என்டிஏ, மகாகத்பந்தன் கூட்டணி இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் கடும் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக, சிராக் பஸ்வான் தனக்கு 40 முதல் 45 சீட்கள் வரை வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார். கடந்த 2020 தேர்தலில் தனித்து போட்டியிட்ட சிராக் பஸ்வான் கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வென்ற போதிலும், வாக்குகளை கணிசமாக பிரித்தது. இதனால், ஐக்கிய ஜனதா தளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அக்கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு வெறும் 43ல் மட்டுமே வென்றது. மேலும், 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு திரும்பிய சிராக் பஸ்வான் கட்சி 5 இடங்களில் போட்டியிட்டு ஐந்திலும் வெற்றி பெற்றது.

இதனால் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் 40 சீட்களை கட்டாயம் ஒதுக்க வேண்டுமென சிராக் பஸ்வான் ஒற்றை காலில் நிற்கிறார். ஆனால் இவ்வளவு சீட்களை தர பாஜவோ, ஐக்கிய ஜனதா தளமோ விரும்பவில்லை. இது ஒருபுறமிருக்க, முன்னாள் முதல்வர் மஞ்சி தங்கள் கட்சிக்கு கவுரமான எண்ணிக்கையில் சீட்களை ஒதுக்க வேண்டுமென கூறி உள்ளார். குறைந்தபட்சம் 15 சீட்களை தந்தால் போட்டியிடுவதாகவும், இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடாமலேயே இருப்பதாகவும் அவர் போர்க்கொடி தூக்கி உள்ளார்.

கடந்தமுறை பாஜ 110 சீட்களில் போட்டியிட்டு 74 இடங்களை கைப்பற்றியது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கடும் சரிவை சந்தித்தது. இதனால் இம்முறை ஐக்கிய ஜனதா தளத்தின் வலிமையை காட்ட வேண்டுமென்பதில் நிதிஷ் தீவிரமாக உள்ளார். எனவே வழக்கம் போல், பாஜவுக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் அதிகப்படியான சீட்கள் வேண்டுமென அவர் நினைக்கிறார். ஆனால் கூட்டணி கட்சிகள் இம்முறை அதிக சீட்கள் கேட்பதால் என்டிஏ கூட்டணியில் கடுமையான குழப்பம் நிலவுகிறது.

மகாகத்பந்தன் கூட்டணியை பொறுத்த வரையிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கடந்த 2020 தேர்தலில் 144 சீட்களில் போட்டியிட்டு 75 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனாலும் ராகுல் காந்தி நடத்திய பாஜவின் வாக்குத் திருட்டுக்கு எதிரான யாத்திரை, என்டிஏ கூட்டணி மீதான மக்களின் அதிருப்தி உள்ளிட்ட விஷயங்களால் காங்கிரஸ் இம்முறை 30 இடங்களாவது வேண்டுமென விரும்புகிறது. அதே சமயம் ராஷ்டிரிய ஜனதா தளம் 140 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதால் இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. எனவே இதுவரையிலும் இரு கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலையிலேயே இருக்கின்றன.

* முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் தான்

பாஜ மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சருமான கிரிராஜ் சங் பாட்னாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘என்டிஏ கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார் தான். எங்கள் கூட்டணியில் அனைத்தும் சிறப்பாக நடக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிப்போம்’’ என்றார். அதே சமயம், மகாகத்பந்தன் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் குழப்ப நிலை நிலவுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் அக்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவர் ஆர்ஜேடியின் முதல்வர் வேட்பாளர் என்றும் மகாகத்பந்தன் கூட்டணியின் தேர்வல்ல என காங்கிரஸ் முரண்டு பிடிக்கிறது. தேர்தல் முடிவுக்கு பிறகே முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படுவார் என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

* சிராக் பஸ்வானுக்கு சித்தப்பா எதிர்ப்பு

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து பிரிந்து அவரது சித்தப்பா பசுபதி குமார் பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியை தொடங்கி உள்ளார். இம்முறை தேர்தலில் சிராக் பஸ்வான் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறதோ அதே தொகுதிகளிலும் தனது கட்சியும் வேட்பாளரை களமிறக்கும் என பசுபதி குமார் பராஸ் சவால் விட்டுள்ளார்.

* 25 வேட்பாளர்களை தேர்வு செய்தது காங்.

கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மேலிட தலைவர்கள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் 25 வேட்பாளர்கள் பெயர் முடிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement