தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் ஒன் டூ ஒன் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் தந்தையுடன் வீடியோகாலில் பேசி அறிவாலயத்துக்கு வர அழைப்பு விடுத்த முதல்வர்: நெகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விட்ட நிர்வாகி

சென்னை: ஒன் டூ ஒன் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரின் தந்தையுடன் வீடியோ காலில் பேசி அறிவாலயத்துக்கு அழைத்த முதல்வரின் செயலை பார்த்து அந்த ஒன்றிய செயலாளர் ஆனந்த கண்ணீர் விட்டார். அவரை முதல்வர் தேற்றினார். தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் 13ம்தேதி முதல் நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

Advertisement

இந்த ஒன் டூ ஒன் ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகளை பிரித்து, தொகுதி வாரியாக பிரச்னைகளையும் தேவைகளையும் ஆய்வு செய்து வருகிறார். இந்த கூட்டங்கள் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில், திமுகவின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், மக்களின் குறைகளைத் தீர்க்கவும் நடத்தப்படுகின்றன. உடன்பிறப்பே வா என்ற தலைப்புடன் நிர்வாகிகளுடன் நடக்கும் ஒன் டூ ஒன் ஆலோசனையில் தொகுதி பிரச்னைகள், தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை தேர்தலை எதிர் கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரது ஆதரவு நிலை குறித்தும், மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் கேட்டறிகிறார். திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சலுகைகளையும், சாதனைகளையும், மாணவ, மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அறிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெறவேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக, ஆலங்குளம் தொகுதி ஒன்றிய செயலாளர் சிவக்குமாரிடம் பேசினார். அப்போது அவர், ‘எங்க அப்பா 1967ல் இருந்து திமுக உறுப்பினர். இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு. உங்க கூட போட்டோ எடுக்க விரும்புகிறார். அவரை கூட்டிட்டு வரலாமா? என்று ஒன்றியச் செயலாளர், முதல்வரிடம் கேட்டார். இதை கேட்டு நெகிழ்ச்சி அடைந்த முதல்வர், ‘அப்பாவுக்கு போன் பண்ணுங்க நானே பேசி வரச் சொல்லுறேன் என்றார்.

இதை தொடர்ந்து வீடியோ காலில் ஒன்றிய செயலாளரின் தந்தை முத்துவேலிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “வணக்கம் நான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் மகன் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறார். அவருடன் நான் பேசினேன். என்னுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறினீர்களா..? நாளைக்கு சென்னை வாரீங்களா.. அறிவாலயத்துக்கு வாங்க போட்டோ எடுத்துக் கொள்ளலாம்” என்று பேசினார். தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள தந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைத்தவுடன் ஒன்றிய செயலாளர் கண்கலங்கி அழுதார்.

தந்தையுடன் முதல்வர் பேசுவதைக் கண்டு ‘இது போதும்’ என்று ஒன்றிய செயலாளர் கண் கலங்கினார். உணர்ச்சிவசப்பட்டு அழுத ஒன்றிய செயலாளரை முதல்வர் மு.க.ஸ்டாலின் தேற்றினார். தம் தந்தையாரிடம் பரிவுடன் பேசிய முதல்வருக்கு கண்ணீர் மல்க அவர் நன்றி தெரிவித்தார். மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணகுமாரை முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.

* அதிமுகவினருடன் தொடர்பு: கோவை சுல்தான்பேட்டை ஒன்றிய செயலாளர் பதவி பறிப்பு

திமுகவில், ஓரணியில் தமிழ்நாடு, உங்களுடன் ஸ்டாலின் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.கஸ்டாலின் தலைமையில் உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த செயல் திட்டத்தின் மூலம் கட்சிக்குள் மிகப் பெரிய கட்டமைப்பு மாறுதலை செய்யத் தொடங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளே கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதில், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், ஒன்றிய பொறுப்புகளில் இருப்பவர்களை அழைத்து அவர்கள் மாவட்டம் மற்றும் தொகுதிகளில் இருக்கும் பிரச்சனைகள், மாவட்ட செயலாளருக்கும், ஒன்றிய செயலாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பது ஏன்?. எந்த விஷயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்கள்? என்னென்ன பிரச்சனைகளை நாங்கள் சரி செய்து கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டு வருகிறார்.

இதில் யார் மீது தவறுகள் இருக்கிறதோ அவர்கள் கட்சி பதவியில் இருந்து நீக்கப்படும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை தெற்கு மாவட்­டம், சுல்­தான்­பேட்டை மேற்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் பி.வி.மகா­லிங்­கம் மீது ஒன் டூ ஒன் விசாரணையின் போது புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிமுகவினருடன் தொடர்பில் இருப்பதாக எழுப்பப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதல்வர் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரிடம் இருந்து ஒன்றிய செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதி­லாக கோவை மாவட்டம் சித்­த­நா­யக்­கன்­பா­ளை­யத்தை சேர்ந்த ஆர்.ரமேஷ், சுல்­தான்­பேட்டை மேற்கு ஒன்­றி­ய பொறுப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­ட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Advertisement

Related News