தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கேலிக்கூத்தானது: ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்
தொகுதி மறுசீரமைப்பு:முதலில் எச்சரித்தவர் முதல்வர்
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் எச்சரித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்த பிறகுதான் மற்ற மாநில முதலமைச்சர்கள் ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றினர். தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பாதிக்கும் என முதலமைச்சர் தெளிவாக சொன்னார்.
இபிஎஸ் அறிக்கை கேலிக்கூத்தானது: ஆர்.எஸ்.பாரதி
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிக்கை கேலிக்கூத்தானது. தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கேவலமாக கூட எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுவார். எடப்பாடி பழனிசாமி கூறுவதை பற்றி கவலைப்படவில்லை; மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டிற்கு மோடி 8 முறை வந்தும் திமுகதான் வென்றது. 8 முறை தமிழ்நாடு வந்தபோதும் திமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் ஜெயித்தோம். பிரதமர் மோடி 8 முறை வந்தும் கூட பாஜகவின் ரிசல்ட் பூஜ்ஜியம்தான் என்றார்.