தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்திய ராணுவத்தை நம்பாமல் பாக். பயங்கரவாதிகளை காங். ஆதரிக்கிறது: அசாமில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

 

Advertisement

மங்கல்தோய்: ‘இந்திய ராணுவத்தை நம்பாமல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது. ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாக்கிறது’ என அசாமில் பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். மிசோரம், மணிப்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திற்கு நேற்று முன்தினம் சென்ற பிரதமர் மோடி, அங்கு நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். தர்ராங் மாவட்டத்தில் ரூ.6,300 கோடி மதிப்பிலும், நுமாலிகர் மாவட்டத்தில் ரூ.12,200 கோடி மதிப்பிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அங்கு நடந்த பொதுக் கூட்டங்களில் பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்த இந்திய ராணுவத்தை ஆதரிப்பதற்கு பதிலாக பாகிஸ்தானால் வளர்க்கப்படும் தீவிரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது.

ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. காமாக்யா அன்னையின் ஆசீர்வாததால் ஆபரேஷன் சிந்தூரில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த மண்ணின் மைந்தனான சமூக சீர்த்த பாடகரும், நடனக் கலைஞருமான பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த 2019ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ‘பாஜ கட்சி கூத்தாடிகளை கவுரவிக்கிறது’ என கூறியிருக்கிறார். 1962ம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது அசாம் மக்களுக்கு நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், பூபன் ஹசாரிகாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காயத்தில் உப்பு தடவுவது போன்றது.

ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்த நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்து, விவசாயிகள் அந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ததற்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பாராட்டுகிறேன். ஒரு காலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இப்போது விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் கைகளில் விவசாயப் புரட்சியைக் காண்கின்றன. சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் நிலத்தை அபகரிக்க, பெண்கள் மற்றும் சிறுமிகளை அவமதிக்க, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மக்கள்தொகையை மாற்றியமைக்கும் சதியை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது. இன்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முழு தேசமும் ஒற்றுமையுடன் முன்னேறி வருகிறது. வளர்ந்த இந்தியா என்பது நாட்டு மக்களின் கனவு மற்றும் தீர்மானம். அதை நாங்கள் நிறைவேற்றுவோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Advertisement