இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங். கையெழுத்து இயக்க போராட்டம்
மார்த்தாண்டம்: வாக்காளர் பட்டியலில் முறைகேடாக பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்கல் ஆகியவற்றை இந்திய தேர்தல் ஆணையம் முறைகேடாக செய்து வருவதாக கூறியும், இதனால் வாக்கு திருட்டு நடைபெறுவதாக கூறியும், அதனை தடுத்து நிறுத்த கோரி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம் குழித்துறை சந்திப்பில் நடந்தது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங் தலைமை தாங்கினார். கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் தமிழக சட்டமன்ற குழு ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
போராட்டத்தில் மேல்புறம் வட்டார தலைவர் ரவிசங்கர், ஜவாகர் பால்மஞ் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், குமரி மேற்கு மாவட்ட தலைவி லைலா ரவி சங்கர், மாவட்ட பொதுச் செயலாளர் அருள்ராஜ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ஜோஸ்லால், விலவூர் பேரூராட்சி தலைவர் பில்கான் குழித்துறை நகர தலைவர் வக்கீல் சுரேஷ், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.