காங். எம்பி சுதாவிடம் சங்கிலி பறித்த கொள்ளையன் கைது
புதுடெல்லி: மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் சுதா டெல்லியில் கடந்த திங்கட்கிழமை காலை நடை பயிற்சி சென்றபோது அவருடைய தங்கச் சங்கிலி மர்ம நபர் ஒருவரால் பறித்து செல்லப்பட்டது. அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து தங்க சங்கிலியை பறித்து சென்றவுடன் டெல்லி காவல்துறையில் எம்.பி சுதா புகார் அளித்தார். கடந்த இரு தினங்களாக செயின்பறித்த திருடனை தேடிவந்த நிலையில் நேற்று காலை சாணக்கியாபுரி போலீசார் சங்கம் விஹார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அளித்த பேட்டியில், ‘‘தமிழ்நாடு பெண் எம்பி சுதாவிடம் செயின் பறித்த ஷாக் ராவத்(24) கைது ெசய்யப்பட்டுள்ளார். இவன் மீது மொத்த 26 வழக்குகள், டெல்லியில் பல்வேறு காவல்நிலையத்தில் உள்ளது. இதையடுத்து அவனிடம் இருந்து சுமார் 4.5 பவுன் தங்க செயின் கைப்பற்றப்பட்டது. அந்த தங்க செயின் சுதா எம்.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.