காங். வெளியிட்ட பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ வீடியோவுக்கு பாஜ கண்டனம்
பாட்னா: பிரதமர் மோடியின் தாயார் போல ஏஐ உருவாக்கிய வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த வீடியோவில் அவர், பிரதமர் தனது மறைந்த தாயார் தேர்தல் நடக்கவுள்ள பீகாரில் தனது அரசியல் குறித்து விமர்சிப்பதை பற்றி கனவு காண்பது போல் இருந்தது.
Advertisement
பிரதமர் மோடியின் தாயார் குறித்த ஏஐ வீடியோவிற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மூத்த பாஜ தலைவர் அனுராக் தாகூர், ‘‘ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் அரசியலானது எவ்வளவு கீழ்த்தரமாக செல்ல முடியும் என்பதை காட்டியுள்ளன. சேறு பூசுவதில் ஈடுபடுவதற்கும் பீகார் மண்ணில் இருந்து மறைந்த ஒரு தாயை அதுவும் கேலிசெய்வதற்கும் பீகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
Advertisement