காங். வௌியுறவு பிரிவு தலைவர் ஆனந்த் சர்மா ராஜினாமா
புதுடெல்லி: காங்கிரஸ் வௌியுறவு பிரிவு தலைவர் பதவியை ஆனந்த் சர்மா நேற்று ராஜினாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஆனந்த சர்மா கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியில் மாற்றம் கொண்டு வர இளம் தலைமுறையினரை ஊக்குவிக்க வேண்டும். கட்சியை மறுசீரமைக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் வௌியுறவு பிரிவு தலைவர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன்” என தெரிவித்துள்ளார். ஆனந்த் சர்மா, ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.