புதுச்சேரி பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி இன்று காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் 300-க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் திடீர் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்பு 300க்கு மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால், நாகை மற்றும் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.