உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தமிழக ஸ்கேட்டிங் வீரர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து
சென்னை: தமிழ்நாட்டின் ஸ்கேட்டிங் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார். இவர், உலக சாம்பியன்ஷிப் ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்தியாவின் முதல் வீரர் என்ற வரலாற்றை படைத்ததுடன் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்றார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெறுவதற்கான ஊக்குவிப்பு திட்ட வீரர் ஆனந்த்குமார் வேல்குமார், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து விளையாட்டுகளில் வென்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
Advertisement
Advertisement