சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழப்பு!
10:51 AM Aug 17, 2025 IST
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் ரமேஷ் (54) நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் செல்லும் பேருந்தில் இன்று காலை பணியில் இருந்த ரமேஷுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழ, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.