கான்கிரீட் தூண்கள் லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து: டிரைவர் பலி : 23 பேர் படுகாயம்
ஆற்காடு: காஞ்சிபுரம் மாவட்டம், பாலு செட்டி சத்திரத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கான்கிரீட் தூண்களை ஏற்றிக்கொண்டு லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. நேற்று அதிகாலை 3 மணியளவில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த மேல்விஷாரத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் நடக்கும் இடம் அருகே லாரி சென்றபோது, சென்னையில் இருந்து பெங்களூருக்கு 25 பயணிகளுடன் வந்த தனியார் சொகுசு பஸ் திடீரென பின்புறம் பயங்கரமாக மோதியது.
Advertisement
இதில் சொகுசு பஸ்சின் முன்புறம் நொறுங்கியது. இடிபாட்டில் சிக்கிய சொகுசு பஸ்சின் மாற்று டிரைவரான கிருஷ்ணகிரி அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்த ஹரிஷ்குமார்(27) சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ்சை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த செரீப் (28) உள்பட 23 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
Advertisement