சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வில் பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேனிலைப் பள்ளியில் படிக்கும் ஆனந்த் என்பவர் தேர்வில் கணினியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரியிருந்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அதன்படி, மாணவன் ஆனந்த், வாசிப்பாளர் ஒருவர் உதவியுடன் கணினி வழியில் தேர்வு எழுத உள்ளார்.