குடிநீர் தொடர்பான புகார்களை பதிவு செய்ய சென்னை குடிநீர் செயலி அறிமுகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் சமுக வலைதள பதிவு
சென்னை: குடிநீர் தொடர்பான புகார்களை பதிவு செய்ய சென்னை குடிநீர் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. புகைப்படம், முகவரியுடன் இணைத்து புகார் தந்தால் உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு காணப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நடவடிக்கை தாமதமானால் 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்கு புகார் அளிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
சென்னை மெட்ரோ குடிநீர் தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம். புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு. இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி.
திராவிட மாடல்: மக்களை மையப்படுத்திய, தீர்வுகளை நோக்கிய நிர்வாகம் என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில்;
அனைவருக்கும் தரமான குடிநீர் சொன்னோம்... செய்கிறோம்!
செம்பரம்பாக்கத்தில் இருந்து, சென்னை மாநகருக்கு நாளொன்றுக்குக் கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகத்தைத் தொடங்கி வைத்தேன். இதனால், சென்னையின் அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மண்டலங்கள், தாம்பரம் மாநகராட்சியின் குன்றத்தூர் மற்றும் திருப்பெரும்புதூர் நகராட்சிகளில் உள்ள 20 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறப் போகின்றனர் என பதிவிட்டுள்ளார்.