விறுவிறுப்பான போட்டியில் துறுதுறுவென ஆடி வெற்றி: இந்திய வம்சாவளி நிஷேஷ் அபாரம்
சின்சினாட்டி ஓபன் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் நிஷேஷ் பசவரெட்டி (20), ஆஸ்திரேலியா வீரர் அலெக்சாண்டர் வுகிக் (29) உடன் மோதினார். முதல் செட்டில் இருவரும் சம பலத்துடன் மோதினர்.
அதனால் டைபிரேக்கர் வரை நீண்ட அந்த செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக் கணக்கில் நிஷேஷ் வசப்படுத்தினார். தொடர்ந்து துறுதுறுவென ஆடிய நிஷேஷ் 2வது செட்டையும், 7-5 என்ற புள்ளிக் கணக்கில் தனதாக்கி போட்டியில் வென்றார். இதனால், 2வது சுற்றுக்கு நிஷேஷ் முன்னேறினார்.