முதல் ஒரு நாள் போட்டி: ஆஸி ஏ மகளிரை வென்ற இந்தியா
பிரிஸ்பேன்: இந்தியா ஏ மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு, அதிகாரப்பூர்வமற்ற 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸி மகளிர், 47.5 ஓவர்கள் மட்டுமே ஆடி 214 ரன்னுக்கு ஆல் அவுட்டாகினர். அந்த அணியின் அனிகா லீராய்ட் ஆட்டமிழக்காமல் 92 ரன் குவித்தார்.
பின், 215 ரன் இலக்குடன் இந்தியா ஏ மகளிர் ஆட்டத்தை துவக்கினர். துவக்க வீராங்கனைகள் யாதிகா பாட்டியா (59 ரன்), ஷபாலி வர்மா (36 ரன்) அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். தாரா குஜ்ஜார் 31, ராகவி பிஸ்த் ஆட்டமிழக்காமல் 25, கேப்டன் ராதா யாதவ் 19 ரன் எடுத்தனர். 42 ஓவரில் இந்திய அணி, 7 விக்கெட் இழந்து, 215 ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.