தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

35 சமுதாய அமைப்புகளுக்கு விருது காசோலைகளை வழங்கி, புதிதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” வெளியிட்டார் துணை முதல்வர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த 1,401 சுய உதவிக் குழுக்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளையும், 35 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகள் மற்றும் மொத்தம் 59.00 லட்சம் ரூபாய்க்கான விருது காசோலைகளையும் வழங்கி, புதிதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” (Logo) வெளியிட்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.6.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடு முழுவதும் 33,312 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 3,76,443 உறுப்பினர்களுக்கு 3,134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்குவதை துவக்கி வைக்கும் வகையில், சென்னையில் செயல்படும் 1,401 சுய உதவிக் குழுக்களின் 14,083 உறுப்பினர்களுக்கு 123.65 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 5 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், 3 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருது மற்றும் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரெட்டியார் சத்திரம் வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேலம் மேற்கு சூரமங்கலம் நகர அளவிலான கூட்டமைப்பிற்கு விருது மற்றும் தலா ரூ.5.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 35 சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் மற்றும் விருதுத் தொகையாக மொத்தம் 59.00 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழங்கினார்.

தொடர்ந்து, 9.4.2025 அன்று சென்னை, நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் பன்முகக் கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகையாக மொத்தம் ரூ.2.75 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

இவ்விழாவில், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களுக்காக புதியதாக வடிவமைக்கப்பட்ட ”மதி இலட்சினையை” (Logo) வெளியிட்டு, சுய உதவிக் குழுக்களால் தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ‘செக்கு கடலை எண்ணெய்யை’ பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தினார்.

முன்னதாக, இவ்விழாவினையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், காட்சிப் படுத்தப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களைப் பார்வையிட்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் , சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடினார்.

இவ்விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி ஸ்ரேயா பி சிங், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் K.விஜயலட்சுமி, S,சரண்யா மற்றும் அரசு உயர் அலுவலர்கள், சுய உதவிக்குழு மகளிர் கலந்து கொண்டனர்.