கம்யூனிஸ்ட் கட்சியுடனான நட்பு தேர்தலுக்கான நட்பு அல்ல கொள்கை, கோட்பாடு, லட்சிய நட்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: சென்னையில் ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவது வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு அண்மைக் காலமாக கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது பாசம் வருகிறது. எடப்பாடிக்கு செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் இருக்கிறதா என சந்தேகம் வருகிறது. அடிமைத்தனத்தைப் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? என்னில் பாதியான செங்கொடி தோழர்கள் அழைத்து நான் வராமல் இருந்தது இல்லை.
நமக்குள் இருக்கும் தோழமை தேர்தலுக்கானது அல்ல; கொள்கை நட்பு; இங்கு யாருக்கும் யாரும் அடிமை இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் சுட்டிக் காட்டும் பிரச்சனைகளை நான் புறக்கணித்தது கிடையாது. தோழமை சுட்டலுக்கும், அவதூறுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சியுடனான நட்பு தேர்தலுக்கான நட்பு அல்ல கொள்கை, கோட்பாடு, லட்சிய நட்பு. உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனை செல்வதற்கு முன் தோழர்களை அறிவாலயத்தில் சந்தித்து பேசினேன். அமெரிக்கா கை வைக்கும்போதெல்லாம் கொட்டிவிடும் தேனீக்கள்தான் கியூபா.
சோஷலிச கியூபாவை காப்போம்; ஏகாதிபத்திய சதிகளை முறியடிப்போம். இந்தியாவுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது ஏகாதிபத்திய சதி. டிரம்ப் பேச்சு குறித்து பிரதமர் மோடி பதில் சொல்லாதது அவரது பலவீனத்தை காட்டுகிறது. அமெரிக்கா 50% வரி விதித்தது குறித்து ஒன்றிய பாஜக அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் கூறினார்.