காமன்வெல்த் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் அஜித்; நிருபமாவுக்கு வெள்ளி
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. பளுதூக்குதல் 71 கிலோ எடைப் பிரிவு போட்டியில் இந்திய வீரர் அஜித் நாராயணா (26), ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தமாக, 317 கிலோ பளுதூக்கி தங்கப் பதக்கம் வென்றார். நைஜீரியா வீரர் ஜோசப் எடிடியோங் உமோஃபியா, 316 கிலோ பளுதூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மகளிருக்கான, 63 கிலோ எடைப் பிரிவில் நடந்த, ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் போட்டியில், இந்திய வீராங்கனை நிருபமா (24), மொத்தமாக, 217 பளுதூக்கி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இப்போட்டியில் கனடா வீராங்கனை மாவ்ட் சாரோன் தங்கம் வென்றார்.
Advertisement
Advertisement