விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும்; அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூர்: விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் விஜய் பரப்புரையில் 39 பேர் உயிரிழந்தது குறித்து விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். " ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்தது இதுவரை நடக்காதது. இனி நடக்கக் கூடாது. துயரமான காட்சிகளை பார்த்த போது என் மனதை கலங்கடித்தன. அதனால் இரவோடு இரவாக கரூர் வந்தேன். அரசியல் நோக்கத்தோடு எதையும் சொல்ல விரும்பவில்லை. விசாரணை ஆணையத்தின் மூலம் உண்மை வெளியே வரும். அதன் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement