தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடன்பிறப்பே வா சந்திப்பு மூலம் திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்: கலக்கத்தில் திமுக நிர்வாகிகள் வேலை செய்யவில்லை என்றால் பதவி பறிபோகும்

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ மூலம் திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வேலை செய்யவில்லை என்றால் பதவி பறிபோகும் என்பதால் திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் திமுக தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கி விட்டது. மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம், மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் என திமுகவினர் படுபிசியாக பணியாற்ற தொடங்கியிருக்கும் நிலையில், நிர்வாகிகளின் குறைகள், புகார்களை முதல்வரிடம் நேரடியாக சொல்ல முடியவில்லை என்ற கோரிக்கை எழுந்தது.

Advertisement

இந்த தகவல் முதல்வரும், திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து கலைஞர் பாணியில், ’உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் 234 தொகுதியை சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என அத்தனை பேரையும் ஒன் டூ ஒன் என்ற ரீதியில் தனித் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தப்படும் என்று மதுரையில் நடந்த பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, பொதுக்குழு முடிந்ததும் உடனே அந்த திட்டத்தை கையெலெடுத்து உடன்பிறப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொருவராக சந்தித்து பேசி வருகிறார்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கப்பட்ட ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பில் ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து முதல்வர் குறைகளையும் தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார். இதனால், இதுவரை செய்வதறியாது, உண்மையை கட்சி தலைமைக்கு சொல்ல முடியாமல் தவித்த நிர்வாகிகளுக்கு, கட்சி தலைவரிடமே நேரடியாக தங்களது குறைகளையும் நிறைகளையும், தொகுதியின் தற்போதைய நிலவரத்தையும், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்களின் செயல்பாடுகளையும் சொல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

‘தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது மாதிரி’ தங்களது உள்ளத்தில் இருந்ததை ’உடன்பிறப்பே வா’ என்ற திட்டத்தின் மூலம் கட்சி தலைவரிடமே தெரிவித்து வருகின்றனர். முதல்வரே நேரடியாக கட்சியினரிடம் பேசுவதாலும் அதுவும் ஒன் டூ ஒன் பேசுவதாலும் உற்சாகம் அடைந்துள்ள திமுக தொண்டர்கள், தொகுதிக்கு தேவையானவற்றை எந்த தடையும் இன்றி முதல்வரிடம் சொல்லி வருகின்றனர். அதே நேரத்தில், தொகுதியின் முக்கிய பிரச்னைகள், தலைவலியாக இருக்கும் நிர்வாகிகள் குறித்தும் அவர்களுக்கு முதல்வரிடமே பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் நேரடியாகவே முதல்வரை சந்தித்தனர்.

மாவட்டச் செயலாளர்களை தாண்டி கட்சியின் தலைமைக்கு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் ஏற்படுத்தி தந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சந்திப்பின் மூலம் தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியினர் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறார்கள் மேலும், முதல்வரிடம் சொல்ல முடியாத விஷயங்களை கடிதமாக எழுதி தரலாம் என்றும், அதற்காக தனியாக அறிவாலயத்தில் புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய நிர்வாகிகள் மீதும் புகார்கள் வரும் போது, அதை உடனடியாக சரி செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் திமுக தலைமை ‘உடன்பிறப்பே வா’ மூலம் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் செயல்படாத மற்றும் அத்துமீறக்கூடிய நிர்வாகிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர். இதற்கிடையே, உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில், முதல்வர் நிர்வாகிகளை தனித்தனியாக சந்திக்கும் போது, அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தொகுதி நிலவரம், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்து வருகிறார். பின்னர், திமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகிறார்.

இதனால், உடன்பிறப்பே வா மூலம் திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி நீக்கப்பட்டுள்ார். திருநெல்வேலியில் புதிய மாவட்ட செயலாளராக கிரகாம்பெல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரூர் தொகுதி வேறொரு மாவட்ட செயலாளருக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இப்படி ஒன்-டூ-ஒன் மூலம் சத்தமின்றி கட்சிக்குள் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடைபெற்றுள்ளது, திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், வேலை செய்யவில்லை என்றால் எப்பொழுது வேண்டுமானால் பதவி பறிபோகும் என்ற கலக்கம் கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார். இதன் தொடர்ச்சியாக நேற்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நேற்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

Advertisement

Related News