உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும் வகையில் திமுக சார்பில் உடன்பிறப்பே வா' என்ற தலைப்பின் கீழ் ஒவ்வொரு தொகுதி வாரியாக தொகுதி நிர்வாகிகளை முதமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து சந்தித்து நேர்காணலை நடத்தி வருகிறார்.
அந்த நிகழ்வின் போது ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள களநிலவரம் குறித்து அந்த தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறியக்கூடிய நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்றைய தினம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இருக்கக்கூடிய நேர்காணலினை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிர்வாகிகளை சந்தித்து அந்த தொகுதிகளுடைய நிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார்.
இதுவரை 29 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற்றுள்ளது. இந்த 29 நாட்களில் 65 சட்டமன்ற நிர்வாகிகளை அந்தந்த தொகுதிகளின் களநிலவரம் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைய தினம் 30வது நாளாக மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் திமுகவின் களநிலவரம் குறித்தும், சட்டமன்ற தேர்தலுக்கு ஆயுத்தமாகக்கூடிய பணிகள் எந்த வகையில் நடைபெற்று வருகின்றன.
எந்தெந்த பணிகளை அந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தொகுதி நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கேட்டு வருகிறார். இந்த நிகழ்வின் போது அந்த தொகுதிகளின் பொறுப்பாளர், அமைச்சர் சக்கரபாணியும் உடன்பிறப்பே வா களநிலவர நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.