கொலம்பியா அதிபரின் விசாவை ரத்து செய்த அமெரிக்கா
நியூயார்க்: ஐநா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்திருந்த கொலம்பியா நாட்டு அதிபர் கஸ்டவோ பெட்ரோ, நியூயார்க்கில் நடந்த பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர், அமெரிக்க வீரர்கள் அதிபர் டிரம்பின் பேச்சை கேட்க வேண்டாம் என்று பேசினார். மேலும் ஐநா கூட்டத்தில் பேசிய அவர், டிரம்ப் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக கஸ்டவோ பெட்ரோவின் விசாவை ரத்து செய்வதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. நேற்று முன்தினமே தனது நாட்டிற்கு புறப்பட்ட கஸ்டவோ தனக்கு இத்தாலி குடியுரிமை இருப்பதால் அமெரிக்க விசா அவசியமில்லை என்றார்.
Advertisement
Advertisement