சென்னை: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் (மே 20) நிறைவடைகிறது. 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6ம் தேதி ஆன்லைன் வாயிலாக தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 14 ஆயிரத்து 338 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 68 ஆயிரத்து 389 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவடைகிறது. கடந்த ஆண்டை பொருத்தவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 15% அதிகமாகும்.