தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்; வீடுபுகுந்து கல்லூரி மாணவி குத்திக்கொலை: காதலன் போலீசில் சரண்

Advertisement

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடுகபாளையம் பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் அஸ்விதா (19). மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வந்தார். இப்பகுதியில் வேலைபார்த்த தனியார் நிறுவன ஊழியர் பிரவீனுக்கும் (23) அஸ்விதாவுக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் பிரவீன் உடுமலை ரோடு பகுதியில் உள்ள அண்ணாமலை நகரில் குடியேறினார். எனினும் காதலை தொடர்ந்தனர். இவர்கள் காதலை ஏற்றுக்கொண்ட பெற்றோர் திருமணம் குறித்து பேசத்தொடங்கினர். ஆனால் திடீர் திருப்பமாக பிரவீனை திருமணம் செய்ய அஸ்விதா மறுத்துள்ளார். இதனால் தன்னை மறந்துவிட்டு வேறு வேறு நபரை அவர் காதலிப்பதாக பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் நேற்று அஸ்விதாவை சந்திக்க வடுகபாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு பிரவீன் சென்றார். அங்கு யாரும் இல்லாததை அறிந்து, திருமணத்திற்கு சம்மதிக்கும்படி கூறியுள்ளார். அவர் மறுக்கவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரவீன், கத்தியால் அஸ்விதாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் வந்து அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனிடையே பிரவீன் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisement