பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி சென்னை ஐஐடி பவுண்டேஷன் ஏற்பாடு
சென்னை: சென்னை ஐஐடி பிரவர்தக் டெக்னாலஜீஸ் பவுண்டேஷன் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஸ்டூடன்ட்ஸ் டூ ஸ்டார்ட்-அப் என்ற தொழில்முனைவு பயிற்சியும், பள்ளி மாணவர்களுக்கு டிஸ்கவர் தி ஆன்ட்ரபிரனர் இன் யூ என்ற பயிற்சியும் ஆன்லைனில் அளிக்கப்படும்.
Advertisement
பயிற்சியும், பாடப்புத்தகங்களும் முற்றிலும் இலவசம். முதல் பேட்ஜ் பயிற்சி நவம்பர் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள், https://bodhbridge.iitmpravartak.org.in/.என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அக்டோபர் 28ம் தேதிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
Advertisement