கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு 2 நிறுவனங்கள் தேர்வு
தமிழ்நாட்டின் அரசு கல்லூரிகளில் மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்குவதற்கான திட்டத்துக்கு, குறைந்த தொகை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களாக டெல், ஏசர் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 விலையுடன் (15.6 இன்ச் திரை) டெல் நிறுவனமும், ரூ.23,385 விலையுடன் (14 இன்ச் திரை) ஏசர் நிறுவனம் ஒப்பந்தங்கள் சமர்ப்பித்துள்ளது. இம்மாத இறுதிக்குள் லேப்டாப் கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.