வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட குடோனில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு
ஆற்காடு : அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது 2777 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1572 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1574 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
அந்த மின்னணு இயந்திரங்கள் ஆற்காடு, கண்ணமங்கலம் கூட்ரோடு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை மைய குடோனில் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக பிரித்து வைக்கப்பட்டு குடோன் மூடி சீல் வைத்து பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்யப்படுகிறது.
குடோனில் கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டார்.அப்போது தேர்தல் தனி தாசில்தார் வசந்தி, ஆற்காடு தாசில்தார் மகாலட்சுமி, தேர்தல் துணை தாசில்தார் ரகு, விஏஓ கபிலன் மற்றும்அனைத்துக் கட்சி பிரமுகர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.