குளிர்கால டிப்ஸ்
குளிர்காலம் விரைவில் வந்துவிடும். அதிலிருந்து தப்பிப்பது எப்படி?
இதோ டிப்ஸ்
* குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படுவது சகஜம். கோதுமை தவிட்டை மண் சட்டியில் போட்டு வறுத்து, ஒரு வெள்ளை துணியில் போட்டு முடிச்சு போடவும். இதை உடல் பொறுக்கும் சூட்டில் குழந்தைகளின் தலைப்பகுதியில் ஒத்தி, ஒத்தி எடுக்க வேண்டும். மார்பு மற்றும் முதுகுப் பகுதியில் ஒத்தடம் தரலாம். நிவாரணம் கிடைக்கும்.
* பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு உதடு கருத்து விடும். இதைத் தவிர்க்க தினமும் உதட்டில் மேசா வெண்ணெய் தடவிக் கொள்ளவும்.
* சருமம் மிகவும் வறண்டு இருந்தால் ஆலிவ் ஆயிலை உடம்பில் பூசி மசாஜ் செய்யவும். 15 நிமிடத்திற்கு பின் குளிக்கலாம்.
* குளிர்காலத்தில் உறைமோர் விடும்போது, அதனுடன் சிறிது புளி உருண்டையைப் போட்டால் கெட்டியான தயிர் தயார். அல்லது ஹாட்பேக்கில் பாலை ஊற்றி உரை ஊற்றுங்கள். கெட்டியான தயிர் கிடைக்கும்.
* வெளியே செல்லும்போது ஸ்வெட்டர், சா ல்வை அணிந்து செல்வது நல்லது. குழந்தைகளுக்கு குல்லா, ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து வெளியே அழைத்துச் செல்ல வேண்டும்.
* தொண்டை வலி, கமறல், இருமல் போன்றவற்றுக்கு ஒரு கரண்டியில் நெய்யை விட்டு காய்ந்ததும், ஒரு சிறு துண்டு வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, அரை தேக்கரண்டி மிளகுப் பொடி போட்டு அடுப்பை அணைத்து விடவும். சற்று ஆறியதும் உருட்டி வாயில் போட்டுக் கொண்டால் இதமாக இருக்கும். இருமலும் அடங்கும்.
- விமலா சடையப்பன்