கோவை மாணவி வன்கொடுமை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு பின்புறம் சட்டக் கல்வி பயிலும் மாணவி தனது நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மூன்று மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை மயக்கமடைய செய்துவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் தீவிர கவனம் செலுத்தி, மேற்படி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனையை விரைந்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement