கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவை: கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் தங்க நகை பூங்காவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கோவையில் ரூ.81 கோடியில் 5 தளங்களுடன் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 2.46 ஏக்கர் நிலத்தில் 8.5 லட்சம் சதுர அடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முறையாக தங்கநகை உற்பத்திகென தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. தங்க நகை உற்பத்தி பயிற்சி மையமும் தங்க நகை பூங்காவில் அமையவுள்ளது
Advertisement
Advertisement