கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி பகுதியில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கடந்த 10 நாட்களாக யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்தது.
கோவை மாவட்டம், ஆனைகட்டி பகுதியில் உடலில் காயங்களுடன் ஒரு மக்னா யானை கடந்த ஒரு வாரமாக சுற்றி கொண்டிருந்தது. அந்த யானை கேரளா வனப்பகுதியில் இருந்து வெளியேறி, தமிழக வனப்பகுதியான கூடப்பட்டி என்கிற கிராமத்தின் அருகே வந்தது.
இதனை பார்த்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால் யானை தமிழக வனப் பகுதிக்கும், கேரள வனப்பகுதிக்கும் மாறி மாறி சென்று வருவதால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையயடுத்து வனத்துறையினர் யானைக்கு தொறந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இரண்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மக்னா யானைக்கு காயம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.