தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோவையில் இருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது 3 ஆண் பயணிகள் திடீர் ரகளை: விமான நிலைய போலீசில் பெண் புகார்

சென்னை: கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தபோது நடுவானில் 3 ஆண் பயணிகள் ஆபாச வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதாக பெண் பயணி பரபரப்பு புகார் அளித்துள்ளார். கோவையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் இரவு 140 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நேற்று 10 மணிக்கு கோவையில் புறப்பட்டது, இரவு 11 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தது. இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த 35 வயது பெண் பயணி ஒருவரின் இருக்கைக்கு, பின் வரிசையில் அமர்ந்திருந்த 3 ஆண் பயணிகள் அவர்களுக்குள் கூச்சல் போட்டு, சத்தமாக பேசிக்கொண்டு, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண் பயணி, அந்த ஆண் பயணிகளை அமைதியாக பயணம் செய்யுங்கள். ஏன் இதே போல் கூச்சல் போட்டு, சக பயணிகளுக்கு இடையூறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 ஆண் பயணிகளும் அந்த பெண் பயணியை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. உடனே பெண் பயணி, விமான பணிப்பெண்களிடம், இதுகுறித்து புகார் செய்தார். விமான பணிப்பெண்கள் வந்து, ஆண் பயணிகளை அமைதியாக இருக்கும்படி கூறியும், அவர்கள் தொடர்ந்து கூச்சல் போட்டு ஆபாசமாக பேசிக்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானம், இரவு 11 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் விமானம் நின்ற இடத்தில் இருந்து விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு வருவதற்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பிக்கப் பஸ்சில் ஏறி வந்தனர். அப்போதும் அந்த 3 ஆண்களில் ஒரு நபர், இந்த பெண் பயணியை, முழங்கையால் இடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் பயணி, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இது குறித்து, நேற்று முன்தினம் இரவு புகார் செய்துள்ளார். சென்னை விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பெண் பயணியிடம் இதேபோல் மோசமாக நடந்து கொண்ட அந்த 3 பயணிகள் யார் என்று தெரியவில்லை. போலீசார் சிசிடிவி கேமரா மற்றும் இந்த பயணியின் இருக்கைக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த மூன்று ஆண் பயணிகளின் டிக்கெட்களின் எண்களை வைத்து, அந்த மூன்று ஆண் பயணிகளையும் பிடித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த பெண்ணின் கணவர், ஜிஎஸ்டி வரிவிதிப்பு துறையில் உயர் அதிகாரி என்றும், பெண் சென்னையில் பிரபலமான இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர், அதோடு கோவையில் ஒரு இன்டர்நேஷனல் பள்ளியையும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.