தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது

Advertisement

கோவை: கோவையில் 1998-ல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பான குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். கோவையில் 1998-ல் பிப்.14, 17ம் தேதிகளில், 19 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், 58 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். இதைத் தவிர, 24 இடங்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டன. அதில் அல் - உம்மா தலைவர்களான எஸ்.ஏ.பாட்ஷா, முகமது அன்சாரி உள்ளிட்டோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் 156 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 16 பேர் இன்னும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பத்தப்பட்ட முக்கிய குற்றவாளி 28 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம் ஜெய்பூரில் தலைமறைவாக இருந்து வந்த டெய்லர் ராஜா என்று அழைக்கப்படக்கூடிய சாதிக் ராஜாவை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கைது நடவடிக்கை குறித்து மாநகர போலீசாரை உஷார் நிலையில் இருக்க மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் காவலர்கள் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்த பின்பு விரிவான செய்தி அறிக்கையை வெளியிட போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement