கோவை: கோவை பாரதியார் பல்கலைகழக பொறுப்பு பதிவாளரை பணி நீக்கம் செய்யக் கோரி வரும் 15-ம் தேதி முதல் போராட்டம் நடைபெறுகிறது. வரும் 15-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக பல்கலைகழக அலுவலர்கள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பாரதியார் பல்கலையில் கடந்த 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி நிரப்பப்படாததால், பொறுப்பு குழு பணிகளை கவனித்து வருகிறது. மேலும் 7 ஆண்டுகளாக பதிவாளர் பதவியும் நிரப்பப்படாததால், பேராசியர்கள் பொறுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பதிவாளர் ரூபா குணசீலனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்கலைகழக அலுவலர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் தெரிவித்துள்ளனர்.