கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1 முதல் பார்வையிடலாம்: அமைச்சர் கே.என் நேரு பேட்டி
கோவை: கோவை செம்மொழி பூங்காவை டிசம்பர் 1ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.கோவை காந்திபுரத்தில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
Advertisement
கோவை செம்மொழி பூங்காவை வருகிற 25ம் தேதி காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
முதலில் பூங்கா முகப்பில் கல்வெட்டை திறக்கிறார். பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்ட பின்பு பள்ளி மாணவ, மாணவிகளை சந்திக்கிறார். தொடர்ந்து பூங்கா வளாகத்தில் பொழுதுபோக்கு அம்சத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆம்பி தியேட்டரில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுகிறார்.செம்மொழி பூங்காவை பொதுமக்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிசம்பர் 1ம் தேதி முதல் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement